Followers

Saturday, September 8, 2018

“இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் எங்கே?” மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் கேள்வி

Image result for manmohan singhபிரதமர் மோடி தலைமையிலான அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மன்மோகன் சிங், கடந்த 4 வருடங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிதம் மிகவும் குறைந்துவிட்டது. தேர்தலின் போது இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். ஆனால், இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
COMMENT
மேலும், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என பாஜக அரசு அளித்த வாக்குறுதி தொடர்பாக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வென்ற பாஜக அரசு, இன்னும் அதை நிறைவேற்றவில்லை. அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மோடி கூறிவருவதை மக்கள் நம்பவில்லை என்று மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார்.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Sunday, September 2, 2018

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்


கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் - 15 பேர் பலியானதால் பதற்றம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேராளவில், எலிக் காய்ச்சல் மூலம் இப்போது அடுத்த அச்சம் ஏற்பட்டுள்ளது. இன்று எலிக் காய்ச்சலால் பெண் ஒருவர் பலியானார். இதனால் நோய் பரவலால் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோயால் கடந்த இரண்டு நாட்களில் 8 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளம் காரணமாக நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமை மட்டும் 28 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா முழுவதும் 40 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
இந்த நோய் குறித்து மக்கள் பதற்றப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா. அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Saturday, September 1, 2018

"சிம்புவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்!" - நீதிமன்றம் எச்சரிக்கை

Simbu


  • சிம்பு மீது பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வழக்கு
  • 85.50 லட்சத்தை 4 வாரத்துக்குள் தர உத்தரவு
  • கொடுக்கவில்லை என்றால் பொருட்கள் ஜப்தி
பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சிம்புவை வைத்து `அரசன்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு அதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் பேசி முன் பணமாக 50 லட்சத்தை கடந்த 2013 ஜூன் 17ம் தேதி அளித்துள்ளது. ஒப்பந்தத்தின் படி அவர் அந்தப் படத்தில் நடிக்க முன்வராமல் இழுத்தடித்ததாகவும், இதனால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. இந்த விவகாரத்திற்காக நடிகர் சிம்பு மீது வழக்கு தொடுத்துள்ளது நிறுவனம்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பு விவாதங்களையும் கேட்டு, பின்பு நடிகர் சிம்பு வாங்கிய 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து 85.50 லட்சம் ரூபாயை 4 வாரங்களுக்குள் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை தரவில்லை என்றால், நடிகர் சிம்பு வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டி‌ஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகிய பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. மேலும் சிம்பு பயன்படுத்தும் கார், மொபைல்போன் ஆகியவையும் சேர்த்து ஜப்தி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்