
- சிம்பு மீது பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வழக்கு
- 85.50 லட்சத்தை 4 வாரத்துக்குள் தர உத்தரவு
- கொடுக்கவில்லை என்றால் பொருட்கள் ஜப்தி
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. இருதரப்பு விவாதங்களையும் கேட்டு, பின்பு நடிகர் சிம்பு வாங்கிய 50 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து 85.50 லட்சம் ரூபாயை 4 வாரங்களுக்குள் பேஷன் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தை தரவில்லை என்றால், நடிகர் சிம்பு வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டர், டி.வி., வாஷிங்மெஷின், கட்டில், ஷோபா செட், மின் விசிறிகள், கிரைண்டர், மிக்ஸி, ஏர்கண்டிஷனர், டைனிங் டேபிள், சேர்கள் ஆகிய பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி. மேலும் சிம்பு பயன்படுத்தும் கார், மொபைல்போன் ஆகியவையும் சேர்த்து ஜப்தி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்
No comments:
Post a Comment