தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர்
அருண்ராஜா காமராஜ். ‘ராஜா ராணி, மான் கராத்தே,மரகத நாணயம்’ போன்ற வெற்றிப்
படங்களில் நடித்திருந்த அருண்ராஜா, சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’ படத்தில்
இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி பாடி உலகளவில் ரீச்சாகி விட்டார்.
தற்போது, ‘கனா’ படத்தின் மூலம் அருண்ராஜா காமராஜ் இயக்குநர் அவதாரம்
எடுத்துள்ளார்.
இவர் சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியது
குறிப்பிடத்தக்கது. அருண்ராஜா இயக்கும் ‘கனா’ படத்தின் கதைக்களம் பெண்கள்
கிரிக்கெட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாம். ஹீரோயினுக்கு
முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளாராம். திபு நைனன் தாமஸ்
இசையமைக்கும் இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளா
இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான
‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இதன் போஸ்ட்
புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். நேற்று (ஆகஸ்ட் 23-ஆம்
தேதி) படத்தின் ஆடியோ & டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், படத்தில் இடம்பெறும் ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலின்
லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலை பாடகி வைக்கம்
விஜயலட்சுமியுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயனும், அவரது மகள்
ஆராதனாவும் பாடியுள்ளனர்.
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
Sai Reddy is now officially one of the richest 18-year olds in the Pune and the entire India, for that matter. The Pune native was playin...
-
தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். ‘ராஜா ராணி, மான் கராத்தே,மரகத நாணயம்’ போன்ற வெற்றிப் ...
-
நடனத்தின் மீது வெறி கொண்ட சிறுமி தனது கனவை நிறைவேற்றினாளா என சொல்கிறது `லக்ஷ்மி' லக்ஷ்மி (தித்யா) அலாரம் டோன் கேட்ட...
No comments:
Post a Comment