
படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது
விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
#SarkarAudioFromOct2nd@actorvijay@ARMurugadoss@arrahman@KeerthyOfficial@varusarathpic.twitter.com/Dzel8bifCT— Sun Pictures (@sunpictures) August 24, 2018
சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது
No comments:
Post a Comment