
- 'இந்தியன்' முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
- இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார்
- ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைப
1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம்.
இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். தற்போது, இந்த படத்துக்காக ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவி வர்மனும் லொகேஷன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் படத்தில் நடிக்கவிருக்கும் இதர நடிகர்கள் – பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் மற்றும் ஷூட்டிங் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment