
அமெரிக்க
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு
வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 23 பைசா
சரிந்து, 70.82 என்ற ரீதியில் இருக்கிறது. தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள்
வெளியேறிக் கொண்டிருப்பதும், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதும்
ரூபாய் மதிப்பு வீழிச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது. நேற்று சந்தை நேர
முடிவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 70.59 ஆக இருந்தது. இதையடுத்து
இன்று காலை அது, 70.57 ஆக முன்னேற்றம் பெற்றது. ஆனால் அது திடீரென்று
சரிந்து தற்போது 70.82 ஆக இருக்கிறது.
No comments:
Post a Comment