Followers

Saturday, August 25, 2018

முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு

முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு
பிற மொழிக்கு | Read In

இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம், ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் & கோவுக்கு வழங்கப்பட்டது

 Share
EMAIL
PRINT
0COMMENTS
முதலமைச்சர் மீது ஊழல் புகார் - வழக்கு பதிய உத்தரவிடக் கோரி தி.மு.க மனு
Chennai: நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை வழங்குவதில், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, முதலமைச்சர் மீது தி.மு.க அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு துறைக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல் செய்துள்ளது.
தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், 5 நெடுஞ்சாலை பணிகளையும், பராமரிப்பையும் தனது உறவினர்களுக்கும் ,பினாமிக்கு கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 3,500 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நெடுஞ்சாலை திட்டத்துக்கான செலவு முதலில் 713 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பின்னர் 1,515 கோடியாக அதிகரிக்கப்பட்டத்தையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம், ஈரோட்டைச் சேர்ந்த ராமலிங்கம் & கோவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம், முதல்வர் மகன் மித்துனின், மைத்துனரின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
இதில் பெரும்பாலான திட்டங்கள், உலக வங்கியின் நிதி உதவி பெற்றவை என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஜூன் 13-ம் தேதி ஊழல் தடுப்பு துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நீதிமன்றம், வழக்கு பதிய உத்தரவிடுமாறு ஆர்.எஸ்.பாரதியின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
COMMENT
இதே போல் கடந்த மாதம், முதலமைச்சர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கில், ஊழல் தடுப்புத் துறை முதல் கட்ட விசாரணை நடத்துமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

'நான் பதவியை ராஜினாமா செய்வதாக வரும் தகவல் கற்பனையானது!'- ஓபிஎஸ் பேச்சு

'நான் பதவியை ராஜினாமா செய்வதாக வரும் தகவல் கற்பனையானது!'- ஓபிஎஸ் பேச்சுதமிழக துணை முதல்வரும் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘நான் பதவி விலகுவதாக தொடர்ந்து வரும் செய்திகள் வெறும் கற்பனை’ என்று கருத்து கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை, சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஓ.பன்னீர்செல்வம், ‘அடுத்தடுத்து தமிழகத்தில் இடைத் தேர்தல் வர உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நான் வகித்து வரும் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபடத் தயார்’ என்று பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையொட்டி ஓ.பி.எஸ், ‘நான் ராஜினாமா செய்வதாக வரும் செய்திகள் கற்பனையானவை. அதை நம்ப வேண்டாம்’ என்றுள்ளார்.
Advertisement
மேலும் அவர், ‘திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் வரவுள்ள இடைத் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும்’ என்றார்.
அவரிடம் தொடர்ந்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறியுள்ளது குறித்து கேட்டபோது, ‘அது அவர்களின் கொள்கை முடிவு. விஜயகாந்த், தான் எடுத்த முடிவில் ஸ்திரமாக இருக்க வேண்டும்’ என்று பதில் அளித்துள்ளார்.
COMMENT




(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்

அக்டோபரில் ‘சர்கார்’ ஆடியோ, வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sarkar Audio Launch

படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளது

அட்லியின் ‘மெர்சல்’ படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் 'சர்கார்' படத்தில் ‘தளபதி’ விஜய் நடித்து வருகிறார். இவர்கள் காம்போவில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படமான இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்-க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நெகட்டிவ் ஷேடில் நடிக்கின்றனராம்.‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
சமீபத்தில், விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இந்தாண்டு (2018) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளது

Friday, August 24, 2018

கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் கொடுப்பதாக நாங்கள் அறிவிக்கவில்லை” - ஐக்கிய அரபு அமீரகம்


கேரள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் நிதி தருவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், எந்த தொகையையும் நிதி உதவியாக வழங்க தாங்கள் முடிவு செய்யவில்லை என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சரியாக சென்று சேர, குழு ஒன்றை அமைத்ததாக மட்டுமே தங்கள் நாடு ஒரு வாரத்துக்கு முன் அறிவித்ததாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் அஹமத் அல்பனா தெரிவித்துள்ளார்.
“கேரளாவுக்கு உதவ தேசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இந்திய அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி சென்று சேருவதை உறுதி செய்யும்” என்று மட்டும் தெரிவித்தார் அல்பனா.

“நிதி உதவி அளிக்கப்படும் தொகை பற்றி எந்த அறிவிப்பையும் இது வரை ஐக்கிய அரபு அமீரகம் வெளியிடவில்லை. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன், எங்கள் அரசு இது பற்றி எதுவும் பேசவில்லை” என்றும் அல்பனா கூறுகிறார்.
ak1rvvo
மத்திய அரசும், எந்த நாட்டிடம் இருந்தும் கேரளாவுக்கு உதவி செய்வதாக இது வரை தகவல் இல்லை என்று கூறுகிறது. ஆனால், ஆகஸ்ட் 21-ம் தேதி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் “ ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க இருக்கிறது. வெளிநாட்டில் மலையாள மக்களுக்கு இருக்கும் இன்னொரு வீடு ஐக்கிய அரபு அமீரகம். அவர்களின் ஆதரவுக்கு நன்றி” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
COMMENT
அந்த 700 கோடி ரூபாயை ஏற்க முடியாது என்று மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், கேரள அரசு, மத்திய அரசை சாடி வருகிறது. நிவராணத்துக்கு போதிய நிதி கொடுக்கவும் மறுக்கிறது, கிடைப்பதையும் ஏற்க மறுக்கிறது மத்திய அரசு என்று அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்“கேரளாவுக்கு 700 கோடி ரூபாய் கொடுப்பதாக நாங்கள் அறிவிக்கவில்லை” - ஐக்கிய அரபு அமீரகம்

வெள்ளத்துக்கு முல்லை பெரியாறு தான் காரணம் - கேரள அரசு குற்றச்சாட்டு

கேரள வெள்ளத்தால் 19,500 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் வெள்ளம் ஏற்பட முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளாது. முல்லை பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் நீர் அளவு அதிகரித்து, அந்த அணையையும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
மேலும், "136 அடிக்கு நீர் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடக் கூறிக் கேட்டுக் கொண்டோம். 139 அடி வந்த போதும் கேட்டோம். ஆனால், தமிழகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று கேரள தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்றும் வாதிட்டது.
இன்று தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணையின் நீர் அளவை 142 அடி வரை தேக்கி வைக்கலாம் என்று அனுமதி தந்து உத்தரவிட்டதை தமிழக அரசு முன்வைக்கும் என்று தெரிகிறது.
COMMENT
கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லை பெரியாறு விவகாரத்தில் நீண்ட் காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. அந்த அணை வலுவாக இல்லை என்றும், நீர் கசிவு இருப்பதாகவும் கேரளா அவ்வப்போது வழக்குகளை போட்டு வந்தது. ஆனால், இறுதியாக உச்ச நீதிமன்றம் அணை வலுவாக இருப்பதாகவும், 142 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. 1886 ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும், திருவாங்கூர் மஹாராஜாவுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறதுவெள்ளத்துக்கு முல்லை பெரியாறு தான் காரணம் - கேரள அரசு குற்றச்சாட்டு

மல்லையாவுக்கு இந்திய சிறையில் தரப்பட இருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?

New Delhi: தொலைக்காட்சிப் பெட்டி, தனி கழிப்பறை, துவைக்கும் இடம், வெயில்படும் படி நடை பயிற்சி செய்ய காற்றோட்டமான இடம் போன்ற அம்சங்கள் நிரம்பியது, விஜய் மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் மும்பை ஆர்த்தர் ரோடு ஜெயிலின், பேரக் எண் 12 சிறை. மல்லைய்யாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சித்து வரும் சி.பி.ஐ, இந்த அம்சங்களை எல்லாம் 6-8 நிமிடங்கள் கொண்ட வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்திய சிறைகளில் போதிய வெளிச்சமும், காற்றோட்டமும் இல்லை என மல்லைய்யா தரப்பில் லண்டன் நீதிமன்றத்தில் முன்னர் கூறப்பட்டது. நீதிபதி, மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் சிறை அறையை வீடியோவாக எடுத்து ஆதாரமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. அதன் பேரிலேயே இந்த வீடியோ எடுத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
“இந்திய சிறைகள் ஆரோக்கியமான சூழல் கொண்டதாக இருக்கிறது என்பதை நிரூபிக்கக் கூறியது நீதிமன்றம். நாங்கள் அதற்கான ஆதாரத்தையும், சிறையில் இருக்கும் மருத்துவ வசதிகளையும் பற்றிய ஆதாரத்தை கொடுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால், மல்லைய்யா அடைக்கப்பட இருக்கும் சிறை, கிழக்கு நோக்கியது. அதனால், நல்ல சூரிய ஒளி இருக்கும்” என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது மட்டும் இல்லாமல், மல்லையா சிறையில் இருக்கும் நூலகத்தை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், மத்திய அரசு, சமீபத்தில் இந்திய சிறைகளில் நடத்திய ஆய்வு முடிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களும் சர்வதேச தரத்தில் இருக்கும் எனவும் அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மல்லையாவுக்கு இந்திய சிறையில் தரப்பட இருக்கும் வசதிகள் பற்றி தெரியுமா?

"Social Media Firms Silencing Millions," Says Trump

Donald Trump on Friday did not mention any companies by name. (File)
WASHINGTON: U.S. President Donald Trump criticized social media companies on Friday, saying without evidence that they have silenced "millions of people" in an act of censorship.
Trump criticized the social media industry last week, claiming without providing proof that unidentified companies were "totally discriminating against Republican/Conservative voices."
Those tweets followed actions taken by Apple Inc, Alphabet Inc's YouTube and Facebook Inc to remove some content posted by Infowars, a website run by conspiracy theorist Alex Jones. Jones' own Twitter account was temporarily suspended on Aug. 15.
Trump on Friday did not mention any companies by name. On Tuesday, Facebook, Twitter Inc and Alphabet removed hundreds of accounts tied to an alleged Iranian propaganda operation, while Facebook took down a second campaign it said was linked to Russia.
"Social Media Giants are silencing millions of people. Can't do this even if it means we must continue to hear Fake News like CNN, whose ratings have suffered gravely. People have to figure out what is real, and what is not, without censorship!" Trump said.
Trump's comments come as the social media industry faces mounting scrutiny from Congress over the policing of foreign propaganda'Social Media Firms Silencing Millions,' Says Trump